இட்லி கடையில் காலை உணவு சாப்பிட்ட 3 குழந்தைக்கு ஒவ்வாமை !
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இட்லி கடையில் காலை உணவு சாப்பிட்ட 3 குழந்தை உட்பட 8 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி பத்தாப்பேட்டை பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுபாஷ் என்பவரின் இட்லி கடையில் , இட்லி வாங்கி வந்துள்ளார் அதனை தொடர்ந்து உணவகத்தில் வாங்கி வந்த உணவை சுபாஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 3 குழந்தை உட்பட 8 பேர் சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில், திடீரென குழந்தையிற்கு வாந்தி வந்துள்ளது, உடனடியாக சுபாஷ் வாங்கிவந்த இட்லியில் பார்த்த போது அதில் பல்லி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது, உடனடியாக சுபாஷ் மற்றும் அவரது உறவினர்கள் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் உணவகத்தில் வைக்கப்பட்ட சட்டினியில் பல்லி இருந்ததாக சுபாஷின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு.