சேலம் மாவட்டத்துக்கு கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு

சேலம் மாவட்டத்துக்கு  கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள்  ஒதுக்கீடு

சேலம் மாவட்டத்துக்கு வந்த கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்துக்கு வந்த கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் முடிவுற்றன. இதையடுத்து மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள 3,260 வாக்குச்சாவடிகளில் தேர்தல் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்காக ஏற்கனவே கூடுதல் ஒதுக்கீட்டுடன் 3,936 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 3,936 கட்டுப்பாட்டு கருவிகள், 4,260 வாக்கு சரிபார்க்கும் கருவிகள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டன.

மாவட்டத்துக்கு கூடுதலாக 349 வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்பட்டது. இதனால் பிற மாவட்டத்தில் இருந்து 390 வாக்குப்பதிவு எந்திரங்கள் வரப்பெற்று முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிவுற்றது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் ஓட்டுப்பதிவு மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பொது பார்வையாளர் ஜி.பி.பாட்டீல், மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி ஆகியோர் தலைமையிலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் சட்டசபை தொகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story