தேர்தல் பாதுகாப்பிற்கு காவலர்களுக்கு பணி ஒதுக்கீடு – கலெக்டர் அறிவிப்பு 

தேர்தல் பாதுகாப்பிற்கு காவலர்களுக்கு பணி ஒதுக்கீடு – கலெக்டர் அறிவிப்பு 
தேர்தல் பாதுகாப்பு காவலர்களை அனுப்பும் கூ ட்டம்
பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சுழற்சி முறையில் காவலர்களை தேர்வு செய்யும் பணி நடைப்பெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் இன்று (08.04.2024) கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் பாதுகாப்புக்கு சுழற்சி முறையில் காவலர்களை தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமை வகித்தார். தேர்தல் காவல் பார்வையாளர் நிபால்கர் வைபவ் சந்திரகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்றத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பிற்காக பணியமர்ந்த உள்ள காவலர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இப்பணியில் ஈடுபடும் காவலர்கள் அனைவரும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்று பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட்து.

Tags

Next Story