நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு:திமுக மனு
தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு அமைச்சரிடம் திமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.
தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு அமைச்சரிடம் திமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு திமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக சட்டத்துறை அமைச்சா் ரகுபதியிடம் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் வியாழக்கிழமை அளித்த மனு: தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்ட முதன்மை நீதிமன்றம் அமைய 7.12.22இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதன்படி மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. ஆய்க்குடி கிராமத்தில் தீா்வை ஏற்படாத தரிசு நிலம் தோ்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு ஆகியவை அமைப்பதற்காக உயா்நீதிமன்றத்தில் முன்மொழிவு பரிசீலனை முடிந்து இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான 20-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களை ஓரிடத்தில் அமைத்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்துக்கு அரசாணை பிறப்பிக்க வேண்டும். மேலும், மாவட்ட நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றாா் அவா். தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை உடனிருந்தாா்.
Next Story