நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.31.25 கோடி ஒதுக்கீடு

நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.31.25 கோடி ஒதுக்கீடு

பைல் படம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.31.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 291 இடங்களில் புதிய குளம் மற்றும், 2.70 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது. இதில், 1.28 லட்சம் குடும்பங்களில், 1.98 லட்சம் பேர், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர்.

இதில், 1.45 லட்சம் பேருக்கு, 100 நாள் வேலைக்குரிய வருகை பதிவேடு புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. வாரத்திற்கு ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40,918 பேர்களுக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகின்றன. நுாறு நாள் பணியாளர்கள் வாயிலாக, மரக்கன்றுகளை உற்பத்தி செய்தல், மரக்கன்று நடுதல், ஏரி, குளங்கள் துார்வாருதல், கட்டடம், பாசன கால்வாய் தடுப்பணை, பல்வேறு அரசு அலுவலக கட்டடம் ஆகியவை கட்டுதல், பொது இடங்களில் குளங்களை வெட்டுதல், நீர் தேங்குமிடத்தில் சுற்றிலும் கற்கள் பதித்தல் ஆகிய பணிகளை செய்து வருகின்றனர். இதுதவிர, விவசாயிகளின் நிலங்களில், தனி நபர்களுக்கு திறந்தவெளி கிணறு வெட்டி கொடுத்தல் ஆகிய பணிகளை செய்து வருகின்றனர்.

Tags

Next Story