வாக்குப்பதிவு இயந்திரங்கள் மார்ச்.20 ல் ஒதுக்கீடு
ஆட்சியர் தீபக் ஜேக்கப்
நாடாளுமன்ற பொது தேர்தல், 2024 வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு வரும் மார்ச்.20 அன்று நடைபெறவுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். -
எதிர்வரும், ஏப்.19 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பொருட்டு முதல் (1st Randomization) நிகழ்வு வருகிற, மார்ச்.20 அன்று, மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளம் அறை எண்.37இல் (தேர்தல் கணினி அறை) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story