கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 4,229 வீடுகள் ஒதுக்கீடு

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில்  4,229 வீடுகள் ஒதுக்கீடு

ஆட்சியர் பிருந்தா தேவி 

சேலம் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 4,229 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கையின் போது கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி அறிவித்தப்படி தமிழ்நாடு ஊரக பகுதிகளில் ஏற்கனவே கலைஞரின் வீட்டு வசதி திட்டம், புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பட்டியல்களில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் புதிய கான்கிரீட் வீடுகள் ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுத்து குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திற்கு 2024-25-ம் ஆண்டிற்கு 4,229 வீடுகள் கட்ட முதற்கட்ட ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.அனைத்து வட்டாரங்களில் தகுதியுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியல்கள் வருகிற 30-ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் அன்றைய தினம் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



Tags

Next Story