இலவச வீட்டுமனைக்கு விவசாய நிலம் ஒதுக்கீடு - கிராம மக்கள் உண்ணாவிரதம்

இலவச வீட்டுமனைக்கு விவசாய நிலம் ஒதுக்கீடு - கிராம மக்கள் உண்ணாவிரதம்
பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை ஊராட்சிப் பகுதியில், நடுவக்கரை மற்றும் குன்னவாக்கம் பகுதிகள் உள்ளன. இங்கு வசிக்கும் ஆதிதிராவிடருக்கு, கடந்த 1980ல், அன்றைய செங்கல்பட்டு தாலுகா நிர்வாகம், விவசாய நிலம் வழங்கியுள்ளது. அப்பகுதியினர், துவக்கத்தில் விவசாயம் செய்து, நாளடைவில் கைவிட்டதால், தற்போது தரிசாக உள்ளது. இச்சூழலில், திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களுக்கு, அந்நிலத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க, வருவாய்த் துறை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தகைய நடவடிக்கையை கைவிட்டு, ஆதிதிராவிடர்கள் வசமே நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென, கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து, வருவாய்த்துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம் அருகில், நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

Tags

Next Story