வாக்குசாவடி பணியாளர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு

வாக்குசாவடி பணியாளர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு
X

வாக்குசாவடி பணியாளர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணியாளர்களின் இரண்டாம் கட்ட ரேண்டமைசேசன் இன்று நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணியாளர்களின் இரண்டாம் கட்ட ரேண்டமைசேசன் இன்று தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடியில் தேர்தல் பணியாற்றும் கீழ்கண்ட விபரப்படியான பணியாளர்களுக்கு, தொகுதி ஒதுக்கீடு மற்றும் அணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வாக்குச் சாவடி தலைமை அலுவலர் - 1947, வாக்குச் சாவடி அலுவலர் 1 - 1947 வாக்குச்சாவடி அலுவலர் 2 - 1947 வாக்குச்சாவடி அலுவலர் 3 - 1947, வாக்குச் சாவடி அலுவலர் 4 (1200 வாக்காளர்களுக்கு மேல்) 238 என மொத்தம் 8026 பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.

மாற்று திறனாளி வாக்காளர்கள் (PWD) தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி எண் 42 தி விகாசா பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மட்டும் ரேண்டம் முறையில் அல்லாமல் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மேற்கண்ட விபரப்படி தொகுதி ஒதுக்கீடு மற்றும் அணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நபர்களுக்கு , வருகிற 7ஆம் தேதி கீழ்கண்ட பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Tags

Next Story