மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

குமரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.


குமரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு சுழற்சி முறையில் வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலந்தாய்வு தேர்தல் பொதுப்பார்வையாளர் ஷேஷகிரி பாபு, முன்னிலையில் ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (05.04.2024) கலந்தாய்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளிடையே தெரிவிக்கையில் - கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளமையால் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் இன்றைய தினம் கன்னியாகுமரி பாராளமன்றத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் சுழற்சி முறையில் மின்னனு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி வாரியாக மின்னனு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டதையடுத்து அந்த மின்னனு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்து பணி பெல் பொறியாளர்கள் முன்னிலையில் விரைவில் நடைபெறவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story