வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இரண்டாவது சீரற்றமயமாக்கல் முறையின்படி அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற பொது தேர்தல் 2024-யை முன்னிட்டு காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரம் EVM (ம) வாக்காளர் சரிபார்க்க கூடிய தாள் இயந்திரம் VVPAT ஆகியவை கீழ்கண்ட இடங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் : 396 வாக்குப்பதிவு இயந்திரம், 396 கட்டுப்பா ட்டு இயந்திரம் , 429 விவிபேட் ஆகியவை காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழம்பியிலும் , உத்திரமேரூர் : 362 வாக்குப்பதிவு இயந்திரங்களும் , 362 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் , 392 விவிபேட் இயந்திரங்களும் , உத்திரமேரூர் அருகே உள்ள திருப்புலிவனம் டாக்டர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் , செங்கல்பட்டு : 535 வாக்குப்பதிவு இயந்திரங்களும் , 535 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் , 579 விவிபேட் இயந்திரங்களும் காட்டாங்குளத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் ,

திருப்போரூர் : 383 வாக்குப்பதிவு இயந்திரங்களும் , 383 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் , 414 விவிபேட் இயந்திரங்களும் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் , மதுராந்தகம் : 328 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 328 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 356 வி வி பேட் இயந்திரங்களும் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் , செய்யூர் : 315 வாக்குப்பதிவு இ யந்திரங்களும் 315 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 342 வீவிபேட் இயந்திரங்களும் , செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மேற்படி பாதுகாப்பு அறையில் உள்ள வாக்கு பதிவு இயந்திரம் EVM (ம) வாக்காளர் சரிபார்க்க கூடிய தாள் இயந்திரம் VVPAT ஆகியவற்றை அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள வாக்குசாவடிகள் வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணியான இரண்டாவது சீரற்றமயமாக்கல் (2nd Randomization) ஆனது காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில், காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் புபேந்திர எஸ்.சௌத்திரி மற்றும் காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கான அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மேற்படி இரண்டாவது சீரற்றமயமாக்கல் முறையின்படி அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு EVM & VVPAT இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் காஞ்சிபுரம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் / சார் ஆட்சியர் செங்கல்பட்டு, மற்றும் காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் உடனிருந்தனர்.

Tags

Next Story