வாக்குப்பதிவு இயந்திரங்களை இணையவழி வாயிலாக ஒதுக்கீடு பணி !

வாக்குப்பதிவு இயந்திரங்களை இணையவழி வாயிலாக ஒதுக்கீடு பணி !

வாக்குப்பதிவு இயந்திரம்

வாக்குப்பதிவு இயந்திரங்களை இணையவழி வாயிலாக ஒதுக்கீடு செய்திடும் பணி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இணையவழி வாயிலாக ஒதுக்கீடு செய்திடும் பணி ஆட்சியரகத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இரண்டாம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இணையவழி வாயிலாக ஒதுக்கீடு செய்திடும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் தலைமையில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் ராஜேந்திரகுமார் வர்மா, முன்னிலையில் நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தும் வகையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள். வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு கணினி முறை குலுக்கலின்படி தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவி, VVPAT கருவிகள் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல், எறையூர் சர்க்கரை ஆலை தலைமை செயல் நிர்வாகி ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்வைத்தியநாதன், வட்டாட்சியர்கள், மற்றும் துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story