நெகிழிப் பொருட்களுக்கு மாற்று உறுதி மொழியேற்பு

நெகிழிப் பொருட்களுக்கு மாற்று உறுதி மொழியேற்பு

வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், நெகிழிப் பொருட்களுக்கு மாற்றை பயன்படுத்த உறுதி மொழி ஏற்கப்பட்டது.


வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், நெகிழிப் பொருட்களுக்கு மாற்றை பயன்படுத்த உறுதி மொழி ஏற்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் முனைவர் ஆர்.அருண்குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பது, நெகிழிப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், நெகிழிப் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் பற்றியும், மக்கும் குப்பை, மக்காத குப்பை போன்றவற்றின் நன்மை தீமைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில், முனைவர் என்.முத்துக்குமரன், முனைவர் என்.செந்தில்குமார், முனைவர் எம்.சுருளிராஜன், முனைவர் எம்.விஜயபிரியா, மற்றும் 25க்கும் மேற்பட்ட பண்ணைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் நெகிழிப் பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். ஏற்பாடுகளை முனைவர் என்.முத்துக் குமரன் செய்திருந்தார்.

Tags

Next Story