அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
பாஜக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளரும், தலைமை கழக பேச்சாளருமான ஷகிலா பானு, மனிதநேய மக்கள் கட்சியின் அம்மாபேட்டை பகுதி செயலாளர் அப்துல்லா, அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் மகபூப்பாட்ஷா, அம்மாபேட்டை பகுதி துணை செயலாளர் பாதுஷா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் கொண்டலாம்ப்டடி பகுதி துணை செயலாளர் முகமது ஆசிப், துணை செயலாளர் சையத் காதர், 19வது டிவிசன் செயலாளர் முகமது இஸ்மாயில் ராஜா, மக்கள் நீதி மையம் கட்சியின் சூரமங்கலம் பகுதி துணை செயலாளர் முகமது ஹனீபா ஆகியோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது புதியதாக அதிமுகவில் இணைந்தவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாஜலம், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், மாநகர அவை தலைவர் பன்னீர் செல்வம், அம்மாபேட்டை 2வது பகுதி கழக செயலாளர் ஜெயபிரகாஷ், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் சையத்அலி, மாவட்ட தலைவர் சாதிக்பாட்ஷா, மாவட்ட இணை செயலாளர் அபுபாய் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.