திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

திமுகவில் இணைவு
நாகை மாவட்டம், கீழையூர் மேற்கு ஒன்றியம் மேல வாழக்கரை ஊராட்சி ஏர்வைக்காடு கிராமத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகைளை சேர்ந்த 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அக் கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி ஏர்வைக்காட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கீழையூர் மேற்கு ஒன்றியச் தி.மு.க. செயலாளர் மலர்வண்ணன் தலைமை தாங்கினார். மேல ஊராட்சி மன்ற தலைவர் தனபால் வரவேற்றார். கிளை செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், ராஜோந்திரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகேஷ்வரன், கிளை பொருாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 40 குடும்பங்களை சேர்ந்த 80பேர் அக் கட்சிகளில் இருந்து விலகி நாகை மாவட்டக் தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தலைவர் கௌதமன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு இரு வண்ண கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு கட்சியில் இணைத்து கொள்ளப்பட்டது.
நிகழ்சசியில் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், வாழக்கரை ஊரட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுதாஅருணகிரி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் செல்வா, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜோதிபாசு, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் குவளை கணேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செந்தில், ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் மார்டீன்லூதர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்திரா மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
