ஒசூர் அருகே எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

ஒசூர் அருகே எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

ஒசூர் அருகே அதிமுக உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து விலகி 500க்கும் மேற்ப்பட்டோர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

ஒசூர் அருகே அதிமுக உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து விலகிய 500க்கும் மேற்ப்பட்டோர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் ஒசூர் ஒன்றிய திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

திமுக மாவட்ட செயலாளரும், ஒசூர் எம்எல்ஏவுமான பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று ஒசூர் ஒன்றியத்தின் 16வது வார்டு திமுக அலுவலகத்தை திறந்து வைத்து, 68 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் திமுக கொடியினை ஏற்றி வைத்தனர் பின்னர் 16வது வார்டு பொதுமக்களுக்காக இலவச மருத்துவமுகாம் தொடங்கப்பட்டது.

இதில் இரத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை,கண், இதயம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருத்துவம் பார்த்து இலவசமாக மாத்திரைகள் வழங்கப்பட்டன பின்னர் ஒசூர் ஒன்றிய திமுக செயலாளர் கஜேந்திர மூர்த்தி தலைமையில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்ப்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், 16 வது வார்டு ஒன்றிய கவுன்சிலருமான சம்பத்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பின்னர் புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு ஒசூர் MLA பிரகாஷ் திமுகவின் துண்டை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.. ஒன்றிய கவுன்சிலர் சம்பத் குமார், 3 ஊராட்சிகளில் பொதுமக்களுக்காக தான் செய்த பணிகளை பட்டியலிட்டும், மேலும் பல கிராமங்களில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன், குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா, வீடற்றோருக்கு இலவச வீட்டுமனைகள் பெற்று தர வேண்டுமென ஒசூர் எம்எல்ஏவிடம் கோரிக்கைகளை வைத்தார்.

இதற்கு பின்பு பேசிய பிரகாஷ் படிப்படியாக பணிகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.. இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ முருகன், மாவட்ட துணை செயலாளர் புஷ்பா சர்வேஷ், கவுன்சிலர்கள் ரமேஷ்,கோபால் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்

Tags

Next Story