அமைச்சர் முன்னிலையில் திமுக - வில் இணைந்த மாற்று கட்சியினர் .

அமைச்சர் முன்னிலையில் திமுக - வில் இணைந்த மாற்று கட்சியினர் .

திமுக - வில் இணைந்த மாற்று கட்சியினர்

பல்வேறு காட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

கிள்ளியூர் ஒன்றியம் இனயம் புத்தன் துறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேவதாஸ் தலைமையில் மாற்று கட்சியைச் சார்ந்த சம்பத், ரஞ்சித் சிங், சஜன், பிரதீஷ் , சுஜின் , அகில் மற்றும் கீழ்குளம் பேரூராட்சி ஒன்றாவது வார்டு பகுதி சேம்பிளஞ்சி விளை பகுதியைச் சார்ந்த சதீஷ் உட்பட மற்றும் பலர் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழச்சி நேற்று மாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஒன்றிய தி மு க செயலாளர் பி கோபால், ஒன்றிய துணைச் செயலாளர் துரைராஜ், மத்திகோடு ஊராட்சி துணை தலைவர் ஜெனோ மற்றும் குறும்பனை பகுதியை சார்ந்த ஜீன் மற்றும் மாவட்ட திமுக தொழிலாளர் அணியினுடைய அமைப்பாளர் சபின் உட்பட பலர் கலந்து கொண்டனர். புதிதாக இணைந்த இளைஞர்கள் நாளை 28 - ஆம் தேதி குமரிக்கு வருகை தர இருக்கின்ற மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சரும், மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி - க்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதாக இளைஞர்கள் கூறினர்கள்.


Tags

Next Story