மாற்று கட்சியினர் பாஜகவில் ஐக்கியம் !
பாஜக
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர் பார்வதி சிவகுமார் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் ,மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சட்டப்பேரவை தொகுதிக்குள் உள்ளடங்கிய திருமுருகன் பூண்டி நகராட்சி 22 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பார்வதி சிவக்குமார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர் இன்று பாரதிய ஜனதா கட்சி தன்னை இணைத்துக் கொண்டார். நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளராக உள்ள மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் பிரச்சாரத்திற்காக திருமுருகன் பூண்டி வந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் நகராட்சி கவுன்சிலர் பார்வதி சிவகுமார் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். புதிதாக இணைந்த அவருக்கு மத்திய இணை அமைச்சர் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தியில் செயல்பட்டு வந்த பார்வதி சிவக்குமார் தற்போது கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story