மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

திமுகவில் இணைந்தவர்கள்


ஓமலூர் அருகே பெரியேரிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரைப்பட நடிகர் பெஞ்சமின் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர் தெற்கு ஒன்றியம் பெரியேரிப்பட்டி மற்றும் வெள்ளக்கல்பட்டி ஊராட்சிகளிலிருந்து அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளிலிருந்து விலகி ரெட்டிப்பட்டி அ.தி.மு.க முன்னாள் கிளை செயலாளர் கோவிந்தன் தலைமையில் 45 பேரும், அஸ்தம்பட்டி பகுதி, 6-வது கோட்டத்தை சார்ந்த முகமதுகாசீம், நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின், முகமது யூனுஸ் உட்பட 60 பேரும் மற்றும் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை ஆட்டோஸ்டேண்ட் ஆட்டோ ஓட்டுநர்கள் சரவணன் தலைமையில் 50 பேரும் என மொத்தம் 155 பேர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி மாவட்ட திமுக செயலாளர் இராஜேந்திரன்.எம்.எல்.ஏ முன்னிலையில் தி.மு.கவில் இணைத்து கொண்டனர். உடன் மாவட்டஅவைத் தலைவர் ஜி.கே.சுபாசு, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன்,மாநகர பொருளாளர் எம்.எம்.ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி மற்றும் ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமரன், மாவட்ட கவுன்சிலர் சண்முகம், விவசாய தொழிலாளர் அணி சிவா என்ற சுப்பரமணியன், விளையாட்டு மேம்பாட்டு அணி சத்யன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story



