திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
X

திமுகவில் இணைந்தவர்கள் 

சேலம் அருகே நங்கவள்ளியில் மாற்று கட்சியை சேர்ந்த 700பேர் மாவட்ட செயலாளர் செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் தம்மை இணைத்து கொண்டனர்.
சேலம் மேற்கு மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் அர்த்தனாரி ஈஸ்வரன் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த பூபதி, கேசவன், ராஜமாணிக்கம், மதன்குமார், முருகேஷ், கார்த்திக், ராஜா, கோபி, கார்த்திக், நிர்மல்ராஜ் ஆகியோர் தலைமையில் 700 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

Tags

Next Story