நடிகர் விஜய் கட்சியை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்

நடிகர் விஜய் கட்சியை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள்  

நாகையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500 பேர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தனர்/

நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக்கழகத்தை நோக்கி படையெடுக்கும் மாற்றுக் கட்சியினர், அக்கட்சியில் தங்களை ஐக்கியமாக்கி வருகின்றனர். அந்த வகையில் நாகையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், வேளாங்கண்ணியை சேர்ந்த 500,க்கும் மேற்பட்டோர், தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்களை வரவேற்ற, நாகை மாவட்ட செயலாளர் சுகுமாறன், அவர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நகர செயலாளர், வழக்கறிஞர் அணியினர், மகளிரணியினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story