முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா நடுநிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ‌ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர் கேட்டில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா நடுநிலை பள்ளி. இந்த நடுநிலைப் பள்ளியில் கடந்த 1984-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை பயின்ற 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ - மாணவிகள் பல்வேறு ஊர்களில் இருந்து குடும்பத்துடன் வந்து 30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கலந்துரையாடினார். இங்கு படித்த மாணவ மாணவிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் அனைவரும் வந்திருந்து மாணவ, மாணவியர்கள் தங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு கம்ப்யூட்டர் ஒன்று வழங்கப்பட்டது.

மேலும் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு மரியாதையை செலுத்தி நினைவு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 30 வருடங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்டதை போல தங்கள் ஆசிரியர்களுடன் மீண்டும் புகைப்படத்தை எடுத்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கினர். இந்நிகழ்வில் தங்களின் காலத்தில் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.செல்வன், ஆசிரியர்கள் என். இராமசாமி, கே.எம்.ஜெயகுமார், எ. சண்முகசுந்தரம், எ. நாகராஜன், எம். ராஜாமணி மற்றும் தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story