காரப்பட்டு அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஊத்தங்கரை அருகே காரப்பட்டு அரசு பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியில் 1997, ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ,மாணவியர் தமிழ்நாட்டின் பிற மாவட்டத்திலிருந்து வந்து தங்களது குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ஞானபண்டிதன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை குத்து விளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார். இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத், சத்தியநாதன், கேசவக்குமார், சந்திரசேகர், வெங்கடாசலம், வெங்கடேசன், குப்பம்மாள், தர்மன் ஆகிய தங்களது 10 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பொன்னாடை, நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்தனர். 1997ம் ஆண்டு வரை படித்த மாணவ,மாணவிகளை அறிமுகம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர் கேக் வெட்டியும் குழு புகைப்படம் எடுத்து கொண்டும், தங்களது பழைய அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். இதில் முன்னாள் மாணவர்கள் தொழிலதிபர் குமார், ஸ்டேட் பேங் வங்கி ஓசூர் கிளை மேலாளர் சென்னகிருஷ்ணன், சிவசக்தி உள்பட பலர் கலந்துக்கொண்டனர். இறுதியாக முன்னாள் மாணவர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags

Next Story