பண்ணந்தூர் பீ.டி.பலராம் சிங் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பண்ணந்தூர் பீ.டி.பலராம் சிங் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

பண்ணந்தூர் பீ.டி.பலராம் சிங் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு விழா 31 ஆண்டுகள் கழித்து நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பீ.டி.பலராம் சிங் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1992-1993 ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் சந்திப்பு விழா 31 ஆண்டுகள் கழித்து நடைபெற்றது.

இதில் பள்ளிக்கு வருகை தந்த ஆசிரியர்களை பள்ளி வளாகத்தில் வரிசையாக நின்ற முன்னாள் மாணவர்கள் கைத்தட்டி பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படத்தை பார்த்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவற்றை பார்த்து ரசித்து கைகட்டி உற்சாகமுடன் மகிழ்ந்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள அவர்கள் பயின்ற வகுப்பறை உள்ளே சென்று நின்று போட்டோ மற்றும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் மாணவர்கள் அனைவரும் தங்களது ஆசிரியர்களை அமர வைத்து தங்களது குடும்பத்துடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து இப்ப பள்ளிக்கு இடம் மற்றும் கட்டிடங்கள் கொடையாக அளித்து மாணவர்களது மனதில் நீங்கா இடம் பிடித்த பள்ளியின் நிரந்தர புரவலர் பீ.டி.பலராம் சிங் அவர்களது திருவுருவ சிலைக்கு,

அவரது துணைவியார் அனுசுயா பாய் பலராம் சிங் மாலை அணிவித்து இப்பள்ளியின் உடைய வரலாற்றை நினைவு கூர்ந்தார். பின்னர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது சந்திப்பு பற்றியும் பள்ளி காலத்தில் நடைபெற்ற இனிமையான நிகழ்வுகளை நினைவு படுத்தியும் பேசி மகிழ்ந்தனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விழுந்து கொடுத்து தங்களது குடும்பத்துடன் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் குழு புகைப்படம் எடுத்து சென்றனர். 31 ஆண்டுகள் கழித்து ஒன்றாய் படித்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்து,

அதனை விழாவாக சிறப்பித்து தங்களது மகிழ்வான நினைவுகளை பகிர்ந்து கொண்ட சம்பவம் அனைவரிடையே நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story