மதுரை தியாகராஜர் கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மதுரை தியாகராஜர் கல்லூரியில்  பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மதுரை மதுரை தியாகராஜர் கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

1979 1982 ஆம் ஆண்டில் பி எஸ் சி கணிதவியல் பயின்ற மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரி மாணவர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர். இ

ந்த விழாவினை மேனாள் மாணவர் தற்போது எழுமலை பாரதியார் வெற்றி மேல்நிலைப்பள்ளி நிறுவனர் பொன் கருணாநிதி வரவேற்றார். தற்போதைய தியாகராஜர் கல்லூரி முதல்வர் பாண்டியராஜா நிகழ்வை துவக்கி வைத்து தானும் இக்கல்லூரியின் பழைய மாணவர் என்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர்கள் நான்கு பேரும் தனக்கும்,

ஆசிரியர்களாக இருந்தார்கள் என்றும் அவர்களது பெருமையை எடுத்து கூறினார். மேனாள் பேராசிரியர்கள் கோகுல்நாத் விஜயராகவன் சுப்ரமணியன் கிரிதரன் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் தடம் கண்டித்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பழைய மாணவர்களை பாராட்டினர் தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் மேனாள் பேராசிரியர் குமரேசன் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு பழைய மாணவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். பழைய மாணவர்கள் பற்றிய சுய குறிப்புகள் அடங்கிய டிஜிட்டல் டைரியை பழைய மாணவர் தென் ஆப்பிரிக்கா போட்ஸ்வானவில் இருந்து

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த கல்வியாளரும் மற்றும் தொழிலதிபருமான பாஸ்கர் தொடங்கி வைக்க அனைவரும் கண்டு ரசித்தனர். பழைய மாணவர்கள் சார்பாக மூவபல் ப்ரொஜெக்டர் ஒன்று கல்லூரிக்கு முதல்வரிடம் வழங்கப்பட்டது தற்போதைய கணதேவியல் துறை தலைவர் செந்தில் குமார் பழைய மாணவர்களை வாழ்த்தி பேசினார்.மேலும் டாக்டர் பிரபாகரனும் பழைய மாணவர்களை பாராட்டி பேசினார். பழைய மாணவர் (பணி நிறைவு) கல்லூரி முதல்வர் சந்திரன் நன்றியுரை கூறினார். விழாவினை பழைய மாணவர் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணியாற்றி ஓய்வு பெற்ற கணேசன் தொகுத்து வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பழைய மாணவர்கள் கணேசன் சந்திரன் தேரியப்பன் ஜான் அலெக்சாண்டர் பாலசுப்பிரமணியன் விஸ்வநாத் கண்ணன் பொன் கருணாநிதி பகவதி முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பொன் கருணாநிதி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்

Tags

Next Story