நாமக்கலில் முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் குடும்பத்துடன் சந்திப்பு

நாமக்கலில் முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் குடும்பத்துடன் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

1998-99ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல், களங்காணி ஆதி திராவிடர் நலத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவ மாணவியர் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். நாமக்கல் மாவட்டம், களங்காணியில், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில், 1998-99ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான முன்னாள் மாணவ மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப்பின் தாங்கள் படித்த பள்ளிக்கு வந்து சந்தித்துக்கொண்டனர்.

அப்போது ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து, தாங்கள் படித்த காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். மேலும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்களில் பலர் தற்போது, தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு/ தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்களாகவும், மத்திய வேளாண் துறை ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சியாளர்களாகவும், பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவங்களில் பேராசிரியர்கள்,

ஆசிரியர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும், சாஃப்ட்வேர் மற்றும் பல்வேறு துறைகளில் இன்ஜினியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். மேலும், பலர், சுயதொழில் தொடங்கி பல்வேறு பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மாணவ, மாணவியர், தங்கள் முன்னேற்றத்தில் களங்காணி அரசு மேல்நிலைப் பள்ளி பெரும் பங்கு வகித்ததை பெருமையுடன் பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் செல்ஃபி மற்றும் குடும்பத்துடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story