மதுரையில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு

மதுரையில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு
X

முன்னால் மாணவர்கள் சந்திப்பு

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியில் நட்பை மீட்டெடுத்த மாணவர்கள்-மதுரையில் முன்னாள் மாணவர்களின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியில் நட்பை மீட்டெடுத்த மாணவர்கள்-மதுரையில் முன்னாள் மாணவர்களின் 25ம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள அரசு உதவிபெறும் ஆயிர வைசிய வெள்ளியம்பலம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் 25ம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது. சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளி மதுரையின் மிக பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது. 1998 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். தங்கள் பள்ளியில் படித்து வெளியேறி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடித்து தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை அழைத்து அவர்கள் தலைமையில் இந்த விழாவை ஏற்பாடு செய்தனர்.

தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை மதுரை மாவட்ட துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், ஹக்கீம் ஆட்சியை பயிற்சியாளர் சமூக ஆர்வலர், மருது பாண்டியன் MD காட்ஸ் வில் ஹாஸ்பிடல், அழகுபாண்டி தங்க நகை நிபுணர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களோடு அப்போதைய தலைமையாசிரியர் கணபதி (ஓய்வு), சங்கர நாராயணன், பாலு, மாணிக்கவாசகம்,

சூசை அந்தோனி, வெற்றி செல்வம் உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்களிடையே பேசிய ஆசிரியர்கள் தங்களது பணி அனுபவம் குறித்தும் வாழ்க்கையில் நேர்மையாக முன்னேறுவதற்கான அறிவுரைகளையும் வழங்கினர். தொடர்ந்து தங்களது ஆசிரியர்களுக்கு மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி நினைவு பரிசை மகிழ்ச்சியோடு வழங்கி கௌரவித்தனர்.

1998 ஆம் ஆண்டு பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்வோடு சந்தித்து நலம் விசாரித்து தங்களது நட்பை மீட்டெடுத்தனர்.

Tags

Next Story