முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் 1969 ஆம் ஆண்டு முதல் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 900க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

விருதுநகரில் கடந்த 75 ஆண்டுகளாக செந்திக்குமார நாடார் கல்லூரி இயங்கிவருகிறது. இந்த கல்லூரி கடந்த 1947 ம் வருடம் ஆகஸ்டு 11 ம் தேதி தொடங்கி 75 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 75 ஆண்டுகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரியில் பல்வேறு துறைகளில் பயின்று இன்று நல்ல நிலைமையில் பல பேர் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் நல்ல வேலையிலும், சொந்த தொழிலும் செய்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து சந்திப்பு கூட்டம் நடத்த கல்லூரி நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படி கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவ/மாணவியர்களுக்கு கல்லூரியின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்று இன்று நடைபெற்ற மாபெரும் சந்திப்பு கூட்ட நிகழ்சியில். கடந்த 1968-1969ம் ஆண்டு முதல் 2022-2023ம் ஆண்டு வரை பயின்ற மாணவ/மாணவியர்கள் சுமார் 900 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் தாங்கள் பயின்ற வகுப்புகளை பார்வையிட்டு கல்லூரி கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். அமெரிக்கா, தைவான், இங்கிலாந்து மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் மற்றும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியமாநிலங்களிலிருந்து மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

பின்பு கல்லூரி முன்பாக நின்று செல்பியும் எடுத்துக்கொண்டனர்.பின்பு கல்லூரி நிர்வாகம் சார்பாக வெள்ள நிவாரண நிதியும் வசூலிக்கப்பட்டது. வசூலிக்கப்பட்ட நிவாரண நிதியை தமிழக அரசுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தனர் மேலும் இந்த துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் சாரதி வரவேற்று பேசினார். கல்லூரி பரிபாலன சபை தலைவர் வி. பழனிச்சாமி தலைமை வகித்தார். உபதலைவர்கள் என். ராஜமோகன், ஜி. ரம்யா, பொருளாளர் எஸ். சக்தி பாபு மற்றும் சுயநிதி பாடப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ. காளிதாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில் கல்லூரி செயலாளர் எம்.டி. சர்ப்பராஜன் நிறைவுரையாற்றினார். மேலும் ஒவ்வொரு துறையிலும் பயின்ற மாணவ, மாணவியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Tags

Next Story