முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெடியரம்பாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.. இந்நிலையில் இந்த பள்ளியில் 1999 முதல் 2007 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ மாணவியர் ,மற்றும் ஆசிரியர்,ஆசிரியை சந்திப்பு நிகழ்ச்சியானது பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார் .

மேலும் பள்ளிக்கு வருகை தந்த முன்னாள் மாணவ மாணவியர் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக வருகை தந்தனர்.. அவர்களுக்கு பன்னீர் தெளித்து, நெற்றியில் திலகமிட்டு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.. முகப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஆட்டோகிராப் பேனரில் கையெழுத்திட்டு சென்றனர் .மேலும் சிறு குழந்தை பருவத்தில் பள்ளி நாட்களில் வாங்கி தின்ற 90-கிட்ஸ் மிட்டாய்கள், முறுக்குகள், இனிப்புகள், உள்ளிட்டவற்றை வைக்கப்பட்டு இருந்தது .

இதனை சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வமாக எடுத்துச் சாப்பிட்டு பள்ளிக்கால நினைவுகளை நினைவுகூர்ந்தனர்.. மேலும் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி கட்டி பிடித்து கொண்டும், செல்லமாக திட்டிக்கொண்டு, கட்டிப்பிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியை, ஆசிரியர்களும் ,தலைமை ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தந்தனர் .அவர்கள் தங்கள் பள்ளி கால நினைவுகளை முன்னாள் மாணவ மாணவியர் மத்தியில் பகிர்ந்து கொண்டனர்.

நிறைவாக விழாவில் முன்னாள் மாணவ, மாணவியர், முன்னாள் ஆசிரியர் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். மேலும் அரசு பள்ளிக்கு தேவையான இரும்பு பெஞ்ச் ,நாற்காலிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சுமார் 60 ஆயிரம் மதிப்பீட்டில் முன்னாள் மாணவ மாணவியர் சார்பில் வழங்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.. தொடர்ந்து இதுபோல அரசு பள்ளிக்கு உதவிகளை செய்ய உள்ளதாக மாணவ மாணவியர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்..

Tags

Read MoreRead Less
Next Story