திருத்தணி அருகே முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருத்தணி அருகே முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

அரசுப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு  மீண்டும் சந்திப்பு தங்களது ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலைப் பள்ளியில் கடந்த 1983ம் கல்வி ஆண்டில் தமிழ் மற்றும் தெலுகு பிரிவுகளில் படித்த 80 முன்னாள் மாணவ,மாணவியர் மலரும் நினைவு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை வரவேற்று ஆசி பெற்றனர். பள்ளியில் மாணவர்களுடன் தங்களது அனுபவங்கள் குறித்து ஆசிரியர்கள் பகிர்ந்துக்கொண்டனர். அதேபோல் ஆசிரியர்கள் தங்கள் வாழ்வில் ஏற்ப்படுத்திய தாக்கம், கற்றலில் தூண்டுதல், ஒழுக்கம் குறித்து முன்னாள் மாணவர்கள் பகிர்ந்துக்கொண்டனர்.

முன்னதாக 15 வயதில் மாணவ பருவத்தில் பிரிந்து 55 வயதில் மீண்டும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைப்பதாகவும், மருத்துவர்கள், பொறியாளர்கள், ராணுவ அதிகாரிகள் உட்பட அரசு, மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வரும் அவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தபோது தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொண்டு பள்ளி, கல்லூரி வாழ்க்கை, குடும்பம், வேலை உட்பட தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து மனம் விட்டு பேசி மலரும் நினைவுகள் பகிர்ந்துக் கொண்டனர்.

இறுதியாக பள்ளி வளர்ச்சியில் உறுதுனையாக இருந்து பள்ளி புரவலர் திட்டத்தின் மூலம் உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Tags

Next Story