முன்னாள் மாணவர்கள் வெள்ளிவிழா கொண்டாட்டம்

முன்னாள் மாணவர்கள் வெள்ளிவிழா கொண்டாட்டம்

வெள்ளி விழா கொண்டாட்டப்பட்டது 

விருதம்பட்டு பகுதியில் ஐக்கிய ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் விருதம்பட்டு ஐக்கிய ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர்களின் (1997-1999) வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி, காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே நாராயணா திருமண மண்டபத்தில் நடந்தது. ஐக்கிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற முதல்வர் தெ.சாந்தா குணவதி தலைமை தாங்கினார்.

ஆசிரியர்கள் அனைவரும் முன்னிலை வகித்தனர். இ.என்.அகஸ்டின் வரவேற்றார். மறைந்த டீபன் ஏசாயா மற்றும் சந்திர மோகன் ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்கள் நினைவுகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Tags

Next Story