கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

 திருவதிகை பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவதிகை பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் மார்கழி அமாவாசையை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ சரநாராயண பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையும், கிளியை சாத்திக் கொண்டு "ஆண்டாள் ரங்கமன்னராக" விசேஷ அலங்காரத்தில் காட்சி அளித்தார். உத்ஸவர் ஸ்ரீசரநாராயண பெருமாள் திருவல்லிக்கேனி ஸ்ரீபார்த்தசாரதி அலங்காரத்தில் உள் புறப்பாடு நடைபெற்று பின்னர் திருக்கண்ணாடி அறையில் எழந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஹனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஹனுமான் (ஆஞ்சநேயர்) விசேஷ அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்‌.

Tags

Next Story