தமிழ் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா 

தமிழ் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா 

 அம்பேத்கர் பிறந்தநாள் விழா

தமிழ் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா. 
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 133-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமையில், ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் நிருவாகக் கட்டடத்தில், அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு அரசின் ஆணையின்படி "சமத்துவ நாள்" உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில், பல்கலைக்கழக பதிவாளர்(பொ), மக்கள் தொடர்பு அலுவலர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், புலத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.

Tags

Next Story