அதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்

தர்மபுரி அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள அம்பேத்கார் சிலைக்கு அதிமுக கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தர்மபுரி அதிமுக கட்சி சார்பில் தர்மபுரி அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள அம்பேத்கார் சிலைக்கு அதிமுக கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல்,நகரக் கழக செயலாளர் பூக்கடை ரவி,முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன் வேல்,அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் என்ஜிஎஸ் .சிவப்பிரகாசம், நகர அவை தலைவர் அம்மா வடிவேல், நகர துணை செயலாளர் அறிவொளி, நகர துணை செயலாளர் மலர்விழி சுரேஷ் நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், மாவட்ட கழக இணை செயலாளர் செல்விதிருப்பதி, மாவட்ட பிரதிநிதி வேல்முருகன் நகர மன்ற உறுப்பினர்கள் ராஜாத்தி ரவி, தண்டபாணி, அலமேலு சக்திவேல் முன்னா,சத்யா கார்த்திக், செந்தில்குமார்,உமையாம்பிகை நாகேந்திரன், நாகராஜன், மாதேஷ்,அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்வேல், கூட்டுறவு பண்டாங்க சாலை இயக்குனர்கள் மாதேஷ்,ரஞ்சித், அழகேசன்,ஆனந்தன்,கலந்து கொண்டனர்.

Tags

Next Story