அம்பேத்கர் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு

அம்பேத்கர் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.


வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

சேலத்தில் இன்று அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஈரோடு ஜெயராமன், மாநில வழிகாட்டுதல் குழு தலைவர் ஆசிர்வாதம், ஒருங்கிணைப்பு தலைவர் சண்முகம்,துணை பொதுச்செயலாளர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்தும், போட்டியிடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின் முடிவில் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்க்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆதரவு அளிக்கிறது. எங்கள் இயக்கத்திற்கு சேலம், சிதம்பரம், நீலகிரி, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 5 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஒரு தொகுதியை வழங்கினால் அதிமுகவின் சின்னமான இரட்டைஇலையில் போட்டியிட தயாராக உள்ளோம். புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றிக்காக அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் பிரசாரம் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் கலையரசன், புரட்சி மணி, அமுதா, கலைவன், அம்பேத்கர், கோவிந்தன், சித்தையன் உள்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story