விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

அம்பேத்கர் பிறந்த நாள் 

திருச்செங்கோடு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருச்செங்கோடு நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளை திருச்செங்கோடு நகர செயலாளர் சக்திபரமசிவம் தலைமையில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. நகரப் பொருளாளர் பாஸ்டர் ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.இந்நிகழ்வில் திருச்செங்கோடு நகரமன்ற தலைவர் நளினிசுரேஷ்பாபு, திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு ,இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட தலைவர் ஜெயராமன்,நகர துணை செயலாளர் பிரகதீஸ்வரன்,வார்டு செயலாளர்கள் விஜயகுமார், சவுத்ரி, கவின் அரசு, காமேஸ்வரன்,ஷேக்பரீத்,முஹமது பாசித்,சூர்யா,இப்ராஹிம் நகர ஒன்றிய பேரூர் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நகர துணைச் செயலாளர் சகண்பாஷா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Tags

Next Story