மோட்டார் சைக்கிள் மீது அமரர் ஊர்தி மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் மீது அமரர் ஊர்தி மோதி விபத்து -  வாலிபர் உயிரிழப்பு

பைல் படம் 

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது அமரர் ஊர்தி மோதிய விபத்தில் வாலிபர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாடிக்கோட்டையைச் சேர்ந்தவர் பத்மநாதன் (26). அதே பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் வயது 27. பத்மநாதனும் கார்த்திக்கும் மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிதம்பரபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் ஓட்டி வந்த அமரர் ஊர்தி மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பத்மநாதன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். கார்த்திக் காயமடைந்தார். இது பற்றி தகவல் கிடைத்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார் பத்மநாபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், காயமடைந்த கார்த்திக் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இந்த விபத்து குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story