அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி - சட்டசபையில் எம்எல்ஏ கோரிக்கை
தாரகை கத்பட் எம் எல் ஏ
சட்டமன்றத்தில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடையால் டவுன் பஞ். பத்துகாணி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் நலனுக்காக இந்த ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சரியான போக்குவரத்து வசதியோ, முறையான மருத்துவ வசதியோ இல்லை.
இங்கு வசிக்கும் மக்கள் அடிக்கடி வனவிலங்குகள் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு முறையான சிகிச்சைக்காக குலசேகரம், குழித்துறை போன்ற அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டுமெனில் 20 முதல் 25 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டியிருக்கும்.சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் குறித்த நேரத்தில் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே அமைச்சர் பழங்குடியின மக்கள் நலன் கருதி பத்துகாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும் என்று தாரகை கத்பட் எம் எல் ஏ சட்டசபையில் பேசினார் மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துகள் அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.