ஆம்பூர் : தோல் தொழிற்சாலையில் திருடிய தந்தை மகன் கைது

ஆம்பூர் : தோல் தொழிற்சாலையில் திருடிய  தந்தை மகன்  கைது

கைது செய்யப்பட்ட தந்தை,மகன் 

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் தோல்களை திருடிய தந்தை மகன் கைது செய்யப்பட்டு,அவர்களிடமிருந்து 3 லட்சம் மதிப்பிலான தோல்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்றாம்பல்லி பகுதியில் செயல்பட்டு வரும் கலிமுல்லா தோல் தொழிற்சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 28 ந்தேதி மர்ம நபர்கள் தோல்களை திருடி சென்றதாக தொழிற்சாலை உரிமையாளர் ஹனாஸ் என்பவர் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . புகாரின் பேரில் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் போலீசார் இன்று உமராபாத்- உதயேந்திரம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் திருடப்பட்ட தோல்கள் இருப்பது தெரியவந்தது.

அதன் பேரில் காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கன்றாம்பல்லி பகுதியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் அவரது மகன் பிரதீப்குமார் என்பதும், தோல் தொழிற்சாலையில் திருடிய தோல்களை சென்னைக்கு கொண்டு சென்று அங்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு இருவரும் பெங்களூர் சென்று தலைமறைவாகி இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த உமராபாத் போலீஸார் அவர்களிடமிருந்த மூன்று லட்சம் மதிப்பிலான தோல்கள் காருடன் பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்

Tags

Next Story