ஆம்பூர் தோல் தொழிற்சாலைக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

ஆம்பூர் தோல் தொழிற்சாலைக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

தோல் தொழிற்சாலை 

ஆம்பூர் அருகே தோல் கழிவு நீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நிலத்தில் தேக்கி வைத்திருந்த தொழிற்சாலைக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள டெக்கன் டேனிங் கம்பெனி தொழிற்சாலையில் திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்த போது, தொழிற்சாலையில் தோல் கழிவுகளை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், நிலத்தில் தேக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது,

இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால், தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து தொழிற்சாலையை மூட உத்தரவிட்டு, தொழிற்சாலை நிர்வாகத்திற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், உத்தரவிட்டார்.. அதனை தொடர்ந்து அபராத தொகை 2 லட்சம் ரூபாய் அபராத தொகையை தோல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் செலுத்தியுள்ளனர், மேலும் தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவு நீர் அல்லது திடக்கழிவுகளை நிலத்தில் தேக்கி வைத்திருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாணியம்பாடி சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்...

Tags

Next Story