மக்காச்சோளத்தில் 'அமெரிக்கன் படைப்புழு' - இழப்பீடு வழங்க கோரிக்கை
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம்,தலைவாசல், வீரகனூர் கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. குறிப்பாக கடந்த செப்டம்பர், அக்டோபரில், மக்காச்சோள பயிர்களை அதிகளவில் நடவு செய்தனர். ஆனால் பருவ நிலை மாற்றத்தால் மக்காச்சோள தோட்டங்களில், அமெரிக்கன் படைப்புழு' தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த புழு, செடியின் குருத்து பகுதியை உண்பதால் பயிர் முற்றிலும் சேதமடைகிறது. இதுகுறித்து தலைவாசல் விவசாயி "கோவிந்தன் கூறு கையில், 'படைப்புழு தாக்குதல் ஏற்பட்ட மக்காச்சோள பயிரில், வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கும் மருந் துகளை அடித்தால் சில நாட்களில் சரியாகிறது. ஆனால் மீண்டும் புழு தாக்கம் காணப்படுகிறது. பூக்கள் வைத்து கதிர்விடும் நேரத்தில் புழு தாக்குதல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீரகனுார், கிழக்குராஜாபாளையம், கவர்பனை பகுதிகளில் பருவமழை தவறி பெய்ததால் மகசூல் பாதிப்பு, புழு தாக்கம் என, விவசாயிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என்றார்.
சேலம் மாவட்ட வேளாண் துறை அலுவலர்கள் கூறு கையில், தலைவாசல் பகுதிகளில் மக்காச்சோள பயிர்களை ஆய்வு செய்தபோது சில இடங்களில் படைப்புழு, தண்டுப்புழு தாக்கம் உள்ளது. பூக்கள் வைத்த நேரத்தில் மழை இல்லாததால் மகசூல் குறைந்துள்ளது. தற்போது கதிர் பிடித்துள்ள செடிகளில் நோய் தாக்கம்கண்டறிந்து அவற்றை தடுக்கும் மருந்துகளை விவசாயிகளுக்கு பரிந்துரைத்துள்ளோம்' என்றனர்.