வரத்து குறைவால் விலை உயர்ந்த செவ்வந்தி பூக்கள்

வரத்து குறைவால் விலை உயர்ந்த செவ்வந்தி பூக்கள்

செவ்வந்தி பூ 

திண்டுக்கல் சந்தையில் மல்லிகைப் பூவை மிஞ்சும் அளவுக்கு செவ்வந்தி கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திண்டுக்கல் பூச்சந்தைக்கு, ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, தாடிக்கொம்பு, மைலாப்பூா், சாணாா்பட்டி, கொசவப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, முல்லை, சம்மங்கி, செவ்வந்தி போன்ற பூக்கள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில், சந்தைக்கு மல்லிகை, முல்லை, காக்கரட்டான் போன்ற பூக்களின் வரத்து அதிகமாக உள்ளதால், கிலோ ரூ.300 முதல் ரூ.400-க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கிலோ ரூ.100 முதல் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படும் செவ்வந்திப் பூக்களின் வரத்து குறைவாக இருந்ததால், வியாழக்கிழமை கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகையைவிட கூடுதல் விலைக்கு செவ்வந்தி விற்பனை செய்யப்படுவதை அறிந்த பொதுமக்கள், பூ வியாபாரிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

Tags

Next Story