குமரியில் அமித்ஷா ரோடு ஷோ
கன்னியாகுமரியில் அரை கிலோமீட்டர் தூரம் அமித்ஷா ரோடு ஷோ நடத்தினார்.
கன்னியாகுமரியில் அரை கிலோமீட்டர் தூரம் அமித்ஷா ரோடு ஷோ நடத்தினார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அடுத்தடுத்து குமரி மாவட்டத்துக்கு வருகை தந்தபடி இருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளைமறுநாள் (5-ந்தேதி) குமரி மாவட்டத்துக்கு வருகிறார். அவர் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு தக்கலையில் நடைபெறும் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவர் அழகிய மண்டபத்தில் இருந்து தக்கலை பழைய பஸ் நிலையம் வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு-ஷோ செல்ல பாரதிய ஜனதா கட்சியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் போலீசார் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். தக்கலை மேட்டுக்கடையில் இருந்து பழைய பஸ் நிலைய வரையிலான அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ரோடு-ஷோ நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரை கிலோ மீட்டர் தூரமே அமித்ஷா ரோடு-ஷோ சென்று பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.அமித்ஷா பங்கேற்கும் ரோடு-ஷோவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
Next Story