அமித்ஷா பங்கேற்கும் ரோடு ஷோ ரத்து !

அமித்ஷா பங்கேற்கும் ரோடு ஷோ ரத்து !

 ரோடு ஷோ ரத்து

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த நாளை வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த நாளை வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர். மேலும் நாளை பிற்பகலில் அமித்ஷா புதுக்கோட்டை மாவட்டம், திருமயமத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது 525 கோடி ரூபாய் நிதி மோசடி குறித்த புகார் டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினரால் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பிஜேபி வேட்பாளர் தேவநாதன் களத்தில் தொடர்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அமித்ஷா வருகை ரோட் ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story