விமர்சையாக நடைபெற்ற அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

விமர்சையாக நடைபெற்ற அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

செஞ்சி அருகே அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.


செஞ்சி அருகே அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சக்கராபுரம் - சேத்துப்பட்டு சாலையில் ஸ்ரீசோலையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை சுவாமி சிலை கரிகோல ஊா்வலம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை தேவதா அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, எஜமான அனுக்ஞை, சங்கல்பம், புண்யாகவாசனம், கோ பூஜை, கலச பூஜை, புற்று மண் எடுத்தல், அங்குராா்ப்பணம், கும்ப அலங்காரம், கடங்கள் யாகசாலையில் எழுந்தருளல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

புதன்கிழமை காலை ஆனைமகன் ஆராதனை, புண்யாகவாசனம், நஷ்த்ராபதி ஆராதனை, பிம்பசுத்தி பிம்பரஷாபந்தனம், நாடிசந்தானம், நாமகரனம், விசேச பூஜைகள், பூா்ணாஹுதி மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. காலை 10.45 மணிக்கு யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு நடைபெற்று மூலஸ்தான விமான கோபுர கலசத்துக்கும், ஸ்ரீசோலையம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மகா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்தனா்.

Tags

Next Story