12 ஆண்டுகளுக்குப்பின் வீதியுலா நிகழ்ச்சி

12 ஆண்டுகளுக்குப்பின் வீதியுலா நிகழ்ச்சி

அம்மன் வீதியுலா 

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகராஜபுரம் பகுதியில் 12 ஆண்டுக்கு பின் மீண்டும் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

பூட்டை அடுத்த தியாகராஜபுரம் கிராமத்திற்கு ஆண்டுதோறும் தை மாதம் பூட்டை மாரியம்மன் சிலையை கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீதியுலா செல்வது வழக்கம். கடந்த 12 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மாரியம்மன் சிலை தியாகராஜபுரம் கிராமத்திற்கு கொண்டு செல்வது நிறுத்தப்பட்டது.

தற்போது, தியாகராஜபுரம் ஊராட்சி தலைவர் சங்கரன் முயற்சியின் பேரில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதையொட்டி கடந்த 19ம் தேதி மாரியம்மன் சிலை தியாகராஜபுரம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

Tags

Next Story