அம்மன்பட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி

அம்மன்பட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி

மஞ்சுவிரட்டு

அம்மன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெகுவிமரிசையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நடைபெற்ற வடமாடு‌ மஞ்சுவிரட்டு போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 காளைகள்‌ பங்கேற்று 10 குழுக்களைச் சேர்ந்த 120 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளைத் தழுவியதை ஏராளமான பொதுமக்கள்‌ ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

திருச்சுழி அருகே‌ அம்மன்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல் விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. மேலும் இதில் மதுரை,‌ சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட‌ மாவட்டங்களில் இருந்து 14 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு ஒரு குழு என போட்டிகள் நடத்தப்பட்டன. ஒரு குழுவிற்கு 9 வீரர்கள் 3 மாற்று வீரர்கள்‌ என‌ 10 குழுவில் 120 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

ஒரு காளைக்கு 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு போட்டி நடைபெற்ற நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 9- பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த காளையர்கள் காளையை தழுவவில்லை என்றால் காளையே போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் காளைகளை சில குழுவினர் போட்டி போட்டு தழுவினர். மேலும் இதில் வெற்றி பெறும் குழுவினருக்கு ரொக்கப்பணம், வெள்ளிக் காசுகள், சுழல் கோப்பைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story