சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு

அமாவாசை பூஜை

வரும் செவ்வாய் இரவு முதல் புதன் அதிகாலை வரை சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஸ்தலமாகும். அம்மனை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பௌர்ணமி அமாவாசை போன்ற தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். மேலும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் இரவில் கோயில் வளாகத்தில் தங்கி அதிகாலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில் இந்த மாத அமாவாசை வருகின்ற 12 ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.23 மணிக்கு தொடங்கி மறுநாள் 13 ந்தேதி புதன்கிழமை அதிகாலை 5.49 மணிக்கு முடிகிறது. எனவே இந்த நேரத்தில் பக்தர்கள் அமாவாசை தரிசனம் செய்யலாம் என கோயில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story