அம்ரித் திட்டப்பணிகள் புதுகை ரயில் நிலையத்தில் தொடக்கம்

அம்ரித் திட்டப்பணிகள் புதுகை ரயில் நிலையத்தில் தொடக்கம்

அடிக்கல் நாட்டல்

புதுக்கோட்டையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணியை காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

நாடு முழுவதும் 554 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிக்காக காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் படி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் லிப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பாஜ மாநில துணைத் தலைவர் புரட்சி கவிதாசன்,மேற்கு மாவட்டத் தலைவர் விஜயகுமார், பார்வையாளர் பழ, செல்வம், மாநில தரவு மேலாண் நிர்வாகி கார்த்திகேயன், மாவட்ட பொதுச் செயலாளர் குருஸ்ரீராம், நகரத் தலைவர் சக்திவேல், திமுக சார்பில் எம்எல்ஏ முத் துராஜா, நகராட்சி தலைவர் திலகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, திமுகவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், முறையாக விழா நடத்தப்படவில்லை என்றும் எம்எல்ஏ முத்துராஜா ரயில்வே அதிகாரிகளிடம் முறையிட்டார். பின்னர் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர்.

Tags

Next Story