பாபநாசம் பகுதி கோவில்களில் அமுது படையல் விழா

பாபநாசம் பகுதி கோவில்களில் அமுது படையல் விழா

அமுத படையல் 

பாபநாசம் பகுதி கோவில்களில் அமுது படையல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பாபநாசம் பகுதி கோவில்களில் அமுது படையல் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

பாபநாசம் பகுதியிலுள்ள உத்திராபதீஸ்வரர் கோயில்களில் ஆண்டு தோறும் சிறுதொண்ட நாயனார் நினைவாக அமுது படையல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது .இந்நிலையில் பாபநாசம் வங்காரம் பேட்டை , திருப்பாலைத்துறை, நெடுந்தெரு ஆகிய ஊர்களில் அமைந்துள்ள உத்ரா பதீஸ்வரர் கோவில்களில் அமுது படையல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு மங்கள வாத்தியம் முழங்க பெண்கள் சிறார் உள்ளிட்ட பக்தர்கள் பால்குடம் பால்காவடி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக உத்திராபதீஸ்வரர் கோவிலை வந்து அடைந்தனர் தொடர்ந்து உத்திராபதீஸ்வரர் சுவாமிக்கு பக்தர்கள் எடுத்து வந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன மாவால் சீராளன் உருவம் செய்து உத்திராபதீஸ்வரர் சுவாமி பாதத்தில் வைத்து சுவாமிக்கு அமுது படையல் இட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது.

இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு உத்திராபதீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்து அமுது படையல் உணவை உட்கொண்டனர் கோவில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story